1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2025 (13:09 IST)

அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது… ஆனால்?- விஜய் சேதுபதி பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. அந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் அவருக்கு ஒரு நல்ல அறிமுகமாக அமைந்தது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சூது கவ்வும்’ என அடுத்தடுத்து ஹாட்ரிக் கொடுத்து தமிழ் சினிமாவில் தன்னை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்திக் கொண்டார்.

விஜய் சேதுபதி ஹீரோவாக தொடர்ந்து நடித்தாலும் பிற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிக்கவும் தயங்குவதில்லை. அப்படி ரஜினிகாந்துடன் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர், கமல்ஹாசனுடன் விக்ரம் என பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் எப்போது அஜித்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்தார். அதற்குப் பதிலளித்த அவர் “முன்பே ஒருமுறை அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. விரைவில் அவருடன் இணைந்து நடிப்பேன்” எனக் கூறியுள்ளார்.