மீண்டும் இணையும் ‘டிராகன்’ கூட்டணி… இயக்குனர் அஸ்வத் கொடுத்த அப்டேட்!
விஜய்யின் GOAT படத்துக்குப் பிறகு ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கடாயு லோஹர் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை பெரியளவில் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தன. படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை ரிலீஸாகிறது. இந்நிலையில் படம் ரிலீஸுக்குப் பிறகு பெரும்பாலும் பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. லவ் டுடே போல பெரிய ஹிட்டாகும் என சமூகவலைதளங்களில் கருத்துகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் டிராகன் படத்துக்குப் பிறகு மீண்டும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தான் மீண்டும் ஒரு படத்தை இயக்குவேன் என் அஸ்வத மாரிமுத்து கூறியுள்ளார். அந்த படம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் உருவாகும் என்றும் கூறியுள்ளார்.