கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!
குறும்பட இயக்குனர் அலையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து இன்று மிகவும் பிஸியான இயக்குனராக வலம் வருபவர் என்றால் அது கார்த்திக் சுப்பராஜ்தான். தற்போது சூர்யாவை வைத்து அவர் ரெட்ரோ படத்தை இயக்கி முடித்து அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில் அவரின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் நிறுவனம் லெகஸி என்ற வெப் சீரிஸைத் தயாரிக்க உள்ளது. அந்த சீரிஸில் மாதவன், துல்கர் சல்மான் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் நடிகராக இந்த சீரிஸ் மூலமாக அறிமுகமாகிறார்.
இந்த சீரிஸுக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் பைனான்ஸ் செய்கிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.