என்ன ரெண்டு பேரும் ஊஞ்சல் ஆடுறாங்க… சமந்தா பகிர்ந்த வைரல் புகைப்படம்!
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை நடிகை சமந்தா அறிவித்துள்ளார்
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே நானும் ரவுடிதான் இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துவிட்டது. இதையடுத்து நடிகை சமந்தா இப்போது பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.