’விஜய் சேதுபதியை’ சந்திக்க வந்த ’பாலிவுட் பிரபலங்கள்’...வைரல் போட்டோ !
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவரைப் பார்க்க பாலிவுட் பிரபலங்கள் வந்துள்ளதுதான் தற்போதைய லேட்டஸ் வைரல் நியூஸ்.
தென்னிந்திய சினிமா தற்போது பாலிவுட்வுக்கு நிகராக வளர்ந்து வருகிறது. கலெக்சனிலும் ஹிந்தி படத்தை மிஞ்சும் அளவுக்கும் கல்லா கட்டுவதாக தெரிகிறது. அதனால் பாலிவுட் பிரபலங்களில் பார்வை தென்னிந்திய சினிமாவை எட்டிப்பார்த்துள்ளது.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியையும், டோலிவுட்டில் பிரபலமான விஜய் தேவரகொண்டா மற்றும் பார்வதி ஆகியோரைப் பார்க்க, பாலிவுட் பிரபலங்களான ஆயுஸ்மான் குரானா, ஆலியா பட், தீபிகா படுகோன், ரன்வீர் சிங் வந்து சந்தித்துள்ள செய்திதான் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது.
மேலும், இவர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகிவருகிறது.