அவ்வ்வ்..! என் பொண்டாட்டியே சொல்லிட்டா...மகிழ்ச்சியின் உச்சத்தில் ரன்வீர் சிங்!

papiksha| Last Updated: வியாழன், 7 நவம்பர் 2019 (11:16 IST)
பாலிவுட்டின் அழகிய தம்பதிகளான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் இருவரும் தங்களின் படங்களின் மூலம் ரசிகர்களிடம் அதீத அன்பைப் பெற்றவர்கள். திரையில் கெமிஸ்ட்ரி நிறையப் பெற்ற இந்த ஜோடிக்கு அதுவே அவர்களின் காதல் திருமணத்திற்கு முக்கிய காரணமாகவும் அமைந்து. 
திருமணத்திற்கு பிறகு பல நிகழ்ச்சிகளில் கணவன் மனைவியாக சேர்ந்து வரும் அந்த அழகை பார்க்க ரசிகர்கள் கூடுவதும், அன்றைய தலைப்புச்செய்திகளில் இடம்பெறுவதுமாக இருக்கிறார்கள் தீப் -ரன். இதற்கிடையில் இருவரும் சமூகவலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் கலாய்ப்பது, பாராட்டுவது, கொஞ்சுவதுமாக இருந்து வருகின்றனர். இதனை அவரது ரசிகர்கள் மிகவும் கியூட்டாக இருக்கிறது என கூறி ரசித்து வருகின்றனர். 
 
அந்தவகையில் ரன்வீர்சிங் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாட இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் பேசிக்கொண்டிருந்தார். அதை பார்த்த தீபிகா ரன்வீர் க்யூட் அண்ட் ஹாட்டாக இருக்கிறீர் என ஒரு ரசிகையை போன்றே கமெண்ட் போட்டார். உடனே ரன்வீர் ஹேப்பி ஆகி வாவ்..நன்றி பேபி, என் மனைவியிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டு, நான் நிஜமகாவே இன்று ஹாட்டாக  இருக்கிறேன் போல என தெரிவித்தார்.  இது அவர்களுடது ரசிகர்கள் மத்தியில்  மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. 
 
இவர்கள் இருவரும் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ்வின் பயோ பிக் படத்தில் நடித்து வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :