ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 நவம்பர் 2019 (22:10 IST)

ரஜினியை அடுத்து விஜய்சேதுபதிக்கு கிடைத்த பெருமை

தமிழ் திரையுலகில் ஒரு நடிகரின் பெயரிலேயே அந்தப் நடிகர் நடித்த படத்தின் டைட்டிலும் அமைவது என்பது அபூர்வமாக நடந்துவரும் நிகழ்வுகளில் ஒன்றாகும்.  அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த ஒரு படத்திற்கு ’அன்புள்ள ரஜினிகாந்த்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டது. அதன் பின்னர் வேறு வேறு எந்த நடிகருக்காக அவரது பெயரிலேயே அவர் நடித்த படத்தின் டைட்டில் வைக்கப்பட்டதா? என்று தெரியவில்லை 
 
ஆனால் தற்போது விஜய்சேதுபதி நடித்து உள்ள ஒரு படத்திற்கு அவரது பெயரான ’விஜய்சேதுபதி’ என்பதையே டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
விஜய்சேதுபதி, ராஷிகண்ணா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் உருவாக்கிய சங்கத் தமிழன் திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பின் டைட்டிலாக ’விஜய் சேதுபதி’ என்று படத்தின் குழுவினர் அறிவித்துள்ளனர். இதனை அடுத்து விஜய் சேதுபதி படத்தின் டைட்டிலுடன் கூடிய புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தெலுங்கு மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே விஜய்சேதுபதி தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிவுடன் நடித்த சைரா நரசிம்மரெட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற உள்ளதால் தற்போது அவரது படத்திற்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதாக கூறப்படுகிறது