வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2019 (18:50 IST)

அடி மட்டத்துக்கு விலை போன விஜய் சேதுபதி? கோலிவுட் அப்செட்

தெலுங்கு படங்களில் நடிக்க விஜய் சேதுபதி மிகவும் குறைவாக சம்பளம் வாங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 
ஹீரோ என்ற அந்தஸ்தை விட்டு வில்லன் வேடங்களிலும் நடித்து வரும் விஜய் சேதுபதி, சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ஏஏ 20 படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 
 
அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ரூ. 1.5 கோடி சம்பளம் கேட்டாராம். தயாரிப்பு தரப்பும் இந்த தொகைக்கு விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளதாம். ஆனால், இது கோலிவுட் முக்கியஸ்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். 
 
ஆனால், டோலிவுட்டில் விஜய் சேதுபதியின் அறிமுக படமான சயிரா நரசிம்ம ரெட்டி  அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால் விஜய் சேதுபதி இந்த சம்பளத்திற்கு படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.