திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (08:12 IST)

சிம்ரன் & ஜோதிகாவைப் பற்றி மோசமான கமெண்ட் அடித்தாரா விஜய்?... கிளம்பிய சர்ச்சை!

நடிகர் விஜய் பற்றி ஷாம் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்று இப்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

நடிகர் ஷாம் 12 B படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்பாக அவர் விஜய்யின் குஷி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றியிருப்பார். அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஜீவா தன்னுடைய 12 B படத்தில் அவரை அறிமுகப்படுத்த, அந்த படத்தில் அப்போதைய சூப்பர் ஸ்டார் நடிகைகளான ஜோதிகா மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

ஒரு அறிமுக நடிகருக்கு முதல் படத்திலேயே இரண்டு முன்னணி நடிகைகளோடு நடிக்கும் வாய்ப்பு அமைந்தது பற்றி அப்போது ஆச்சர்யமாக பேசப்பட்டது. இந்நிலையில் இதுபற்றி ஷாம் அப்போது விஜய்யை சந்தித்த போது சிம்ரன் மற்றும் ஜோதிகா ஆகிய இருவரையும் குதிரை என்று சொல்லி கமெண்ட் அடித்ததாராம். அதை இப்போது ஷாம் ஒரு நேர்காணலில் ஜாலியாக சொல்லப்போக, அது இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.