விஜய் பட நடிகையை காதலிக்கும் சல்மான் கான்?
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இவர், சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், அக்கால கட்டத்தில் இருந்து பல முன்னணி நடிகைகளுடன் கிசுகிசிவில் சிக்கினார்.
ஆனால், இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணம் தனக்கு செட் ஆகாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
56 வயதாகும் சல்மான் தற்போது டைகர் 3 படத்தில் நடித்து வருவதுடன், பிக்பாஸ் -16 என்ற சூப்பர் ஹிட் நிகழ்ச்சியை 12 ஆண்டிற்கும் மேலாக நிகழ்ச்சி தொகுப்பாளராக நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சிங்கிலான இருக்கும் சல்மான் கான், சல்மான் கானின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனத்தில், பூஜா கெஹ்டே இரு படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும், இருவரும் நெருக்கமாகியுள்ளதாகவும் அதிகம் நேரம் செலவழிப்பதாகவும், சல்மான் கான் பூஜா ஹெக்டேவை காதலிப்பதாகவும் தகவல் வெளியாகிறது.
Edited By Sinoj