வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 3 ஜூலை 2024 (15:11 IST)

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

அஜித்தின் மனைவி ஷாலினிக்கு இன்று அறுவை சிகிச்சை நடந்ததாக கூறப்பட்ட நிலையில் ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் கடந்த சில நாட்களாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்று இருந்த நிலையில் அவரது மனைவி ஷாலினிக்கு அறுவை சிகிச்சை என்பதை அறிந்து நேற்று அவர் சென்னை திரும்பினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஷாலினி சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’எங்கும் அன்பை பரப்புங்கள்’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது உண்மை என தெரிய வருகிறது.

மேலும் ஷாலினி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜித் வெளிநாடு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Edited by Siva