1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 7 டிசம்பர் 2022 (16:05 IST)

வாரிசு படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிவது எப்போது? வெளியான தகவல்!

வாரிசு படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் சில சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை மாஸ்டர் தயாரிப்பாளர் லலித்குமார் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் ஒருபுறம் நடக்க, மற்றொரு பக்கம் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்கும் நடந்து வருகிறது. விஜய் சம்மந்தபட்ட காட்சிகள் முடிந்துவிட்ட நிலையில், இப்போது மற்ற நடிகர்களின் காட்சிகளை வம்சி படமாக்கி வருகிறார். ஒட்டுமொத்தமாக படத்தின் ஷுட்டிங் டிசம்பர் 11 ஆம் தேதி முடிந்து பூசணிக்காய் உடைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.