திங்கள், 9 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 3 ஜூலை 2024 (13:21 IST)

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் ஒரு பிரபலம் இணைந்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அவர் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தில் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இம்மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், ரஜினிகாந்த் மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் இணைந்துள்ளதாக தனது சமூக வலைதளத்தில் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
 
Edited by Mahendran