வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 15 ஜனவரி 2023 (13:21 IST)

விஜய்யின் அம்மாவுக்கு 3வது திருமணமா?

விஜய்யின் அம்மாவுக்கு 3வது திருமணமா?
jayasudha
வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நடிகை ஜெயசுதா தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்தார் என்பதும், அதுமட்டுமின்றி ஆந்திர மாநிலத்தின் அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நடிகை ஜெயசுதா ஏற்கனவே ரமேஷ் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து செய்த நிலையில் அதன் பின்னர் நிதின் கபூர் என்பவரை திருமணம் செய்தார் 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் தற்போது அவர் ரகசியமாக மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் திருமணம் செய்து கொண்டது ஒரு வெளிநாட்டு நபர் என்றும் கூறப்படுகிறது. 
 
ஆனால் இந்த தகவலை ஜெயசுதா மறுத்துள்ளார். தன்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுப்பதற்காக தன்னுடன் அந்த வெளிநாட்டு பயணம் செய்து வருவதாகவும் அவருடன் திருமணம் இல்லை என்றும் இது குறித்து வெளியாகி வரும் தகவல்கள் முழுவதும் வதந்தி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Siva