வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 13 ஜனவரி 2023 (18:28 IST)

அம்மன் கோவிலில் 'சிறப்பு பூஜை' செய்த விஜய் பட நடிகை!

நடிகை பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
 

இதையடுத்து, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

அதேசமயம் இந்தியிலும் முன்னணி நடிகர்களுடன்  இணைந்து  நடித்து வருகிறார்.

பிரபாஷ் ஜோடியாக இவர் நடிப்பில் வெளியான ராதே ஸ்யாம், ரன்வீர் கபூர் ஜோடியாக இவர் நடித்த சர்க்கஸ் படமும் கவலையான விமர்சனம் பெற்றன.

இந்த நிலையில், ஐதராபாத்  பகுதியில் உள்ள பெத்தம்மா கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்துள்ளார்.

இவரது அடுத்து படங்கள் வெற்றியடைய வேண்டுமென பூஜா ஹெக்டே அம்மனை வழிபட வந்ததாகக் கூறப்படுகிறது.