''துணிவு'' படம் ரூ.100 கோடி வசூல்- ஹெச்.வினோத் டுவீட்
துணிவு படம் ரூ.100 கோடி வசூலீட்டியுள்ளதாக இயக்குனர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். வலிமை படத்திற்குப் பின், ஹெச்.வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 11 ஆம் தேதி வெளியான படம் துணிவு.
2014ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் விஜய் – அஜித் படங்கள் நேற்று முன் தினம் ஒரே நாளில் வெளியாகின.
இதில் முதல் நாளில் துணிவு படமும் வாரிசு படமும் நல்ல விமர்சனங்களையும் வசூலீட்டி வருகின்றன.
இந்த நிலையில், உலகம் துணிவு படம் வெளியான 4 நாட்களில் இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று, உலகம் முழுவதும் ரூ. 100 கோடி வசூலீட்டியுள்ளதாக இயக்குனர் ஹெச்.வினோத் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் அஜித் ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர்.