1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 14 ஜனவரி 2023 (14:53 IST)

துணிவு படத்துக்கு 2 க்ளைமேக்ஸ் எடுத்தோம்… இயக்குனர் வினோத் தகவல்!

துணிவு படத்தின் க்ளைமேக்ஸ் குறித்து சில ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

2014ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் விஜய் – அஜித் படங்கள் நேற்று முன் தினம் ஒரே நாளில் வெளியாகின. இதில் முதல் நாளில் துணிவு படம், வாரிசு திரைப்படத்தை விட பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் முதல் நாளில் வாரிசு திரைப்படத்தை விட துணிவு படத்துக்குக் கூடுதல் வசூல் கிடைத்தது.

துணிவு படத்தில் முதல் பாதி விறுவிறுப்பாக இருப்பதாகவும், முதல் பாதியை விட இரண்டாம் பாதி மெதுவாக செல்வதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதுபோல க்ளைமேக்ஸ் காட்சி குறித்தும் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய வினோத் “இரண்டு விதமாக களைமேக்ஸ்களை படமாக்கி இருந்தோம். ஆனால் படத்தை பாசிட்டிவ்வாக முடிக்க வேண்டும் என நினைத்ததால் அவர்கள் தப்பித்து செல்வது போன்ற க்ளைமேக்ஸை படத்தில் வைத்தோம்” எனக் கூறியுள்ளார்.