தளபதி விஜய் கொடுத்த ரூ.1.30 கோடி: யார் யாருக்கு தெரியுமா?
கோலிவுட்டின் முன்னணி நடிகர் பலர் கொரோனா தடுப்பு நிதியாக லட்சங்களிலும் கோடிகளிலும் கொடுத்துள்ள நிலையில் சற்றுமுன் தளபதி விஜய் தனது பங்காக ரூ.1.30 கோடி நிதியுதவி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த பணத்தை அவர் பிரதமர் நிவாரண நிதி மற்றும் ஒருசில மாநில நிவாரண நிதி என பிரித்து கொடுத்துள்ளார். இதுகுறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்
பிரதமர் நிவாரண நிதி: ரூ.25 லட்சம்
தமிழக முதல்வர் நிவாரண நிதி: ரூ.50 லட்சம்
கேரள முதல்வர் நிவாரண நிதி: ரூ.10 லட்சம்
பெப்சி அமைப்பு: ரூ.25 லட்சம்
கர்நாடகா முதல்வர் நிவாரண நிதி: ரூ.5 லட்சம்
ஆந்திரமுதல்வர் நிவாரண நிதி: ரூ.5 லட்சம்
தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதி: ரூ.5 லட்சம்
புதுவை முதல்வர் நிவாரண நிதி: ரூ.5 லட்சம்
மொத்தம் ரூ.1.30 கோடி
மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையை ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அனுப்பி ஏழை மக்களுக்கு நேரடியாக உதவி செய்யவும் விஜய் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது