வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2020 (08:14 IST)

மாஸ்டர் படத்தின் மாஸான அப்டேட்! கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலிஸாக இருந்த நிலையில் தற்போது விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் அல்லது டிரைலர் குறித்த அப்டேட்களுக்காக விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க, படத்தைப் பற்றிய மாஸான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படம் முதல் முறையாக 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக ஐனாக்ஸ் நிறுவனம் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மாஸ்டர் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலிஸாக உள்ளது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கிக் கொண்டாடி வருகின்றனர்.