புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2020 (12:48 IST)

கொரோனா பரிசோதனைக்கு பின் தனிமைப்படுத்தி கொண்ட இம்ரான்கான்

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், ஏழை பணக்காரர், பாமரர் பதவியில் இருப்பவர் என்ற வேறுபாடு இன்றி அனைவரையும் தாக்கி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் உள்பட பல சர்வதேச பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், கொரோனா பரிசோதனையை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
 
கடந்த சில நாட்களுக்கு முன் அறக்கட்டளை நிர்வாகி ஒருவரை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்ததாகவும், தற்போது அந்த அறக்கட்டளை நிர்வாகிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இம்ரான்கான் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் காணொளி மூலம் அரசு நிர்வாகங்களை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது