விஜய் பட தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி செய்த பாலிவுட் நடிகை!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ‘தலைவி’ என்ற டைட்டிலில் இயக்கி வருபவர் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் திடீரென கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனாவால் படப்பிடிப்பு இன்றி தவிக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு பல நடிகர், நடிகைகள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வரும் நிலையில் ‘தலைவி’ படத்தின் நாயகியும், ஜெயலலிதா கேரக்டரில் நடிப்பவருமான கங்கனா ரனாவத் ரூ.5 லட்சத்தை ‘தலைவி’படத்தில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களுக்காக நிதியுதவி செய்துள்ளார். இந்த பணத்தை ‘தலைவி’ படத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என தெரிகிறது.
ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதிக்கு நடிகை கங்கனா ரனாவட் ரூ.25 லட்சம் அளித்துள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி பல ஏழை எளிய மக்களுக்கு உணவு உள்பட அடிப்படை பொருட்களை அவர் வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது