திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (11:39 IST)

வெளிநாட்டு நடனக் கலைஞர்களுடன் ஆடும் வடிவேலு

‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்துக்காக, வெளிநாட்டு நடனக் கலைஞர்களுடன் வடிவேலு நடனமாடும் காட்சி  படம்பிடிக்கப்பட்டு வருகிறது.

 
‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’  படத்தை இயக்கி வருகிறார் சிம்புதேவன். இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். அஜித்தின் ‘பில்லா 2’ படத்தில் ஹீரோயினாக நடித்த பார்வதி ஓமனகுட்டன், இந்தப் படத்தில் வடிவேலு  ஜோடியாக நடிக்கிறார்.
 
ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது. பிரம்மாண்டமான பாடல் காட்சியை முதன்முதலில் படமாக்கி வருகின்றனர். இதற்காக கலை இயக்குநர் முத்துராஜ் மிகப்பெரிய செட் போட்டுள்ளார். அதில், வெளிநாட்டு நடனக் கலைஞர்கள் மற்றும் உள்ளூர் நடனக் கலைஞர்கள் என ஏகப்பட்ட பேருடன்  வடிவேலு ஆடும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.