திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2017 (17:04 IST)

காரி துப்பிய கரடியை வேட்டையாடிய புலிகேசி

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் புலிகேசியை காரி துப்பிய கரடியின் தலை இடம்பெற்றுள்ளது.


 

 
2006ஆம் ஆண்டு சிம்பு தேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் வெளியாகி செம ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. வடிவேலு கதாநாயகனாக நடித்த முதல் படம். தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்குகிறது.
 
இந்நிலையில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் முதல் பாகத்தில் புலிகேசியை பற்றி குறிக்கும் வகையில் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. அதன் பக்கத்திலே கரடி தலையும் உள்ளது.
 
அது வேறு எதுவுமில்லை. முதல் பாகத்தில் காரி துப்பிய கரடியை மன்னன் புலிகேசி எப்படியோ வேட்டையாடி விட்டார் என்பது வெளிப்படுத்துகிறது. அதிலும் ஒரு குழப்பம் உள்ளது. முதல் பாகத்தில் வடிவேலு சொல்லும் வசனம் ஒன்று இரண்டாம் பாகத்திற்கு அருமையான தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது காரி துப்பிய கரடியை புலிகேசி வேட்டையாடியது சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக வலம் வந்து கொண்டிருகிறது.