செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 20 ஏப்ரல் 2020 (18:20 IST)

ஜானு கணவர் கொரோனா வைரசால் இறந்துவிட்டார் - 96 -part 2 கதை கூறிய த்ரிஷா!

பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 96. 90ஸ் காலத்து பள்ளி பருவ காதலை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் மெகா ஹிட் அடித்தது. ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்து அமோக வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் கலெக்ஷனிலும் கல்லா கட்டியது.

த்ரிஷா ஒரு புதிய பரிமாணத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கினார். இந்த படத்தின் வெற்றியை கண்டு வாய்பிளந்த பிற மாநிலத்து சினிமா இயக்குனர்கள் இதனை ரீமேக் செய்ய முயற்சித்தனர். அதில் கன்னடத்தில் 99 என வெளியான இத்திரைப்படத்தில் நடிகை பாவனா நடிக்க தெலுங்கில் ஜானு என்று வெளியான திரைப்படத்தில் நடிகை சமந்தா நடித்திருந்தார். ஆனால், இருவராலும் த்ரிஷாவை ஓவர் டேக் செய்யமுடியவில்லை.


இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தனது இன்ஸ்டாவில் ஸ்டேட்ஸ் பதிவிட்டுள்ள த்ரிஷா, ரசிகர் ஒருவருடன் சேர்த்து டிக் டாக் செய்துகொண்டே 96 பார்ட் 2 படத்தின் கதை கூறியுள்ளார். அதாவது " ஜானுவின் கணவர் பிஸினஸ் மீட்டிங்கில் கலந்து கொண்ட போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்தில் அவர் இறந்துவிட்டார். அதன் பின் ஜானு ஜூம் ஆப் மூலம் வீடியோ காலில் ராமிடம் பேசி இருவரும் சேர்ந்து விட்டனர்” என்று பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஆஹா இந்த கதை நல்ல இருக்கே ஆனால், ராமுவிற்கு கொரோனா வராம இருக்கணும் என கிண்டலடித்து வருகின்றனர்.