1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2020 (17:27 IST)

மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்: டாக்டர் உயிரிழப்பு விவகாரம் குறித்து நடிகர் விவேக்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ததால் கொரோனா தொற்று பரவி சென்னையை சேர்ந்த சைமன் என்ற மருத்துவர் உயிரிழந்த நிலையில் அந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யக்கூட பொதுமக்கள் அனுமதிக்காதது மனிதநேயம் காணாமல் போனதோ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் விவேக் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
 
கொரோனாவால் உயிரிழந்தது ஒரு மருத்துவராக இருந்தால் கூட அவருடைய உடலை அடக்கம் செய்ய முடியாத சூழ்நிலைக்கு உள்ளாகி இருப்பது வருத்தமாக உள்ளது. சைமன் என்ற மருத்துவர், இன்று கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவருடைய உடலை கீழ்ப்பாக்கம் மயானத்திலும் அண்ணா நகர் மயானத்திலும் அடக்கம் செய்ய முடியாதபடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால் கொரோனா தொற்று ஏற்பட்ட உயிரிழந்த மருத்துவருக்கு இப்படி ஒரு நிலையா?
 
சில மருத்துவ உண்மைகள் பொதுமக்கள் புரியவில்லை. கொரோனா வைரஸ் இறந்தவர்களின் உடலில் இருக்காது என்பதை உலக சுகாதார நிறுவனமே தெரிவித்துள்ளது. இதை நான் பல மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து உறுதி செய்துள்ளேன். கொரோனாவால் இறந்தவர்களின் உடலை எரித்தாலும் புதைத்தாலும் யாருக்கும் தொற்று பரவாது. எனவே யாரும் பயப்பட வேண்டாம்
 
நடமாடும் தெய்வங்களாக இருக்கும் மருத்துவர்களை உயிருடன் இருக்கும்போது கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை, உயிரிழந்த பின்னர் அவமதிப்பது பெரும் தவறு.  உடலைக்கூட அடக்கம் செய்யவிடாமல் தடுப்பது என்பது ரொம்ப தவறானது. மருத்துவர்களை உயிரோடு இருக்கும் போது எனவே அந்த மருத்துவருக்காகவும், அவருடைய குடும்பத்தினர்களுக்காகவும் நாம் பிரார்த்தனை செய்வோம்’ என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.