செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (08:50 IST)

டிக் டாக்கில் வந்துவிட்டார் நடிகை த்ரிஷா - ப்பாஹ்... ஒல்லி உடம்ப வச்சு கில்லி டான்ஸ் ஆடுறாங்களே!

தமிழ் திரையுலகில் 17 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக இருப்பவர் த்ரிஷா,தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சரி சமமாக அனைத்து முன்னனி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த இவர் சென்னையை பூர்வீகமாக கொண்ட தெளிவான தமிழ் பேசும் ரசிகர்களின் கனவுகன்னி.

தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் வரலாற்று சிறப்புமிக்க "பொன்னியின் செல்வன்" படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தற்போது கொரோனா வைரஸ் பரவுதலால் உலகம் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகளை பாதியில் நிறுத்திட்டு பிரபலங்கள் பலரும் வீட்டில் ஓய்வெடுத்து வருகின்றனர்.

பொழுதுபோக்கிற்காக அவ்வப்போது விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது, சமைப்பது தோட்ட வேலை செய்வது,  பாட்டு பாடுவது , நடனமாடுவது உள்ளிட்டவற்றில் பிசியாக இருந்து வருகின்றனர். அந்த லிஸ்டில் தற்போது நடிகை த்ரிஷாவும் இணைந்துள்ளார். ஆம், டிக் டாக்கில் என்ட்ரி கொடுத்து முதல் வீடியோ செம்ம டான்ஸ் போட்டுள்ளார் த்ரிஷா. இந்த நடனத்தை பாராட்டிய அவரது ரசிகர்கள் வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

 
@trishkrish583

I bit the bait