செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 31 டிசம்பர் 2018 (18:14 IST)

சிம்பு-த்ரிஷாவை இணைத்து வைத்த ஓவியா

சிம்பு இசையில் ஓவியா நடித்து வரும் '90ml' திரைப்படத்தில் இடம்பெற்ற பீர் பிரியாணி' என்ற பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த பாடலை நடிகை த்ரிஷா இன்று இரவு 7 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த பாடலின் விளம்பரத்தில் 'ஜெஸ்ஸி' இந்த பாடலை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு நடித்த 'விண்ணை தாண்டி வருவாயோ' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஜெஸ்ஸி என்ற கேரக்டரில் த்ரிஷா நடித்திருந்தார் என்பதும் இந்த படத்திற்கு பின் மீண்டும் சிம்பு-த்ரிஷா இணைகின்றனர் என்பதும் அதேபோல் ஓவியாவின் படப்பாடல் ஒன்றை த்ரிஷா தனது டுவிட்டரில் வெளியிடுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது

அனிதா உதீப் இயக்கி வரும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது.