செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 29 டிசம்பர் 2018 (21:46 IST)

சிம்புவோடு மாநாடு நடத்தும் ஆக்‌ஷன் கிங் – மாநாடு அப்டேட்

சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் மாநாடு படத்தில் சிம்புவோடு நடிகர் அர்ஜூனும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிம்பு பல சர்ச்சைகளைக் கடந்து மீண்டும் பிசியான நடிகராக வலம்வர ஆரம்பித்திருக்கிறார். செக்கச் சிவந்த வானம் ரிலிஸாகி சில மாதங்களிலேயே அவரது அடுத்த படமான வந்தா ராஜாவாதான் வருவேன் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது.
சூட்டோடு சூடாக சிம்பு நடிக்கும் அடுத்த படமான மாநாடு படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மாநாடுப் படத்தின் திரைக்கதைப் பணிகளை இயக்குனர் வெங்கட் பிரபு முடித்து விட்டதாக படத்தின்  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டிவிட்டரில்அறிவித்துள்ளார். அதையடுத்து நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜூன் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே அர்ஜூன் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அச்த்தியிருப்பார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து அர்ஜுனுக்கு நிறையக் குண்சித்திர வேடங்கள் வர ஆரம்பித்துள்ளன. அவர் சமீபத்தில் விஷாலோடு குணச்சித்திர வேடத்தில் நடித்த இரும்புத்திரையும் சூப்பர் ஹிட் ஆனது. அதனால் இளம் நடிகர்கள் அர்ஜூனை தங்கள் படத்தில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டுகின்றனர்.