உடல் எடையை குறைத்து கட்டான தோற்றத்துக்கு மாறும் சிம்பு!

Last Modified வெள்ளி, 28 டிசம்பர் 2018 (17:29 IST)
உடல் எடையை குறைக்க முடிவெடுத்த சிம்பு!


 
நடிகர் சிம்பு தற்போது 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் சுந்தர்.சி இயக்கும் இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். 
 
இதனைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவின் 'மாநாடு' படத்தில் சிம்பு நடிப்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக இது உருவாவதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், இந்தப் படத்துக்காக சிறப்புப் பயிற்சி பெற பாங்காக் செல்கிறாராம் சிம்பு. அதோடு 'மாநாடு' படத்தின் கேரக்டருக்காக உடல் எடையை சற்று குறைக்கவும் முடிவெடுத்திருக்கிறாராம். தற்போது மாநாடு படத்தின் ஃப்ரீ புரொடக்ஷன் வேலைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாம். 
 
விரைவில் இதன் படபிடிப்பைத் துவங்கி அடுத்தாண்டு இறுதியில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். 


இதில் மேலும் படிக்கவும் :