திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (19:59 IST)

2019 - ஆம் ஆண்டு சிம்பு ரசிகர்களுக்கானது : மாநாடு தயாரிப்பாளர் டிவீட்

சிம்பு சமீபத்தில் தன் குரலில் பாடி , அசத்தலாக  டான்ஸ் ஆடிய ’பெரியார் குத்து’ பாடல் யுடியூப்பில் நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ’வந்தா ராஜாவாகத்தான் வருவேன்’ படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும்  ’மாநாடு’ படம் அடுத்தாண்டு திரைக்கு வர உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு என்ற படத்தில் நடிக்கப்போவதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. இப்படம் 2019 பிப்ரவரி மாதம் தொடங்க இப்படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
இப்படத்திற்காக சிம்பு உடல் எடையை குறைத்து, தற்காப்பு கலைகள் கற்க இருப்பதாகவும்  தகவல் வெளியாகின்றன.
 
மேலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
 
வெங்கட் பிரபு என்னிடம் அற்புதமான கதையை கூறினார். இது நிச்சயமாக சிம்பு ரசிகர்களுக்கு ஆகச்சிறந்த விருந்தாக அமையும். சிம்புவின் திரையுலக வாழ்விலும் இது முக்கிய படமாக இருக்கும். அடுத்தாண்டு நம்முடையது.அனைவருக்கும் மகிழ்ச்சியான புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் பதிவிட்டிருக்கிறார்.