வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 11 ஜூலை 2020 (18:23 IST)

வீடியோவை நீக்க சொல்லி சிபிசிஐடி போலிஸார் மிரட்டினர் – சுசித்ரா பரபரப்பு புகார்!

சாத்தான்குளம் இரட்டை கொலை பற்றி ஆங்கிலத்தில் வீடியோ வெளியிட்டு இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்த பாடகி சுசித்ரா சிபிசிஐடி போலிஸார் மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

நாட்டையே உலுக்கிய பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகிய இருவரின் சாத்தான்குளம் காவல் நிலைய மரண விவகாரம் குறித்து பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர்கள் இருவரும் காவல்துறையினரால் எவ்வாறு கொடுமைப் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்பதை விளக்கமாக தெரிவித்திருந்தார். அந்த வீடியோ இணையதளங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டது. கிட்டதட்ட 2 கோடி பேரால் பார்க்கப்பட்ட அந்த வீடியோவை திடீரென சுசித்ரா நீக்கியது பல கேள்விகளை எழுப்பியது.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக சுசித்ரா தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘சிபிசிஐடி போலிஸார் என்னை அழைத்து தவறான செய்திகளைப் பரப்பியதற்காகக் கைது செய்யப்படுவீர்கள் என அச்சுறுத்தினர். எனது வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில் அந்த வீடியோவை நான் நீக்கியுள்ளேன். மக்கள் இந்த வழக்கை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நிறைய நாடகங்கள் அரங்கேற உள்ளன’ என எச்சரிக்கை விடுக்கும் விதமாக தெரிவித்துள்ளார்.