உயிருக்கு ஆபத்தான காட்சியில் நடித்த சதிஷ் - ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!
விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட இளம் நடிகர்களுடன் நகைச்சுவை கூட்டணி அமைத்து நடித்து வரும் நடிகர் சதீஷ், முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஹீரோக்களின் நெருங்கிய நண்பனாக காமெடி செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சதிஷ் தொடர்ந்து புது புது படங்களில் கமிட்டாகி வருகிறார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒட்டுமொத்த மக்களாலும் வீடுகளில் தஞ்சம் அடைந்திருக்கும் வேளையில் பிரபலங்கள் பலரும் 24 மணி நேரமும் சமூகவலைத்தளங்களில் நேரத்தை செலவழித்து ரசிகர்களுடன் லைவ் சாட் உள்ளிட்டவற்றில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரில்லா படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் காட்சி ஒன்றை டூப் ஆர்ட்டிஸ்ட் நடித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நடிகர் ஜீவா, பாருங்கள் சதீஷ் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறார் என்று சொல்கிறார்... உடனே, நான் தான் கஷ்டப்படுகிறேன்... ரசிகர்களுக்காக தான் எல்லாம் என்று சதீஷ் நகைச்சுவையாக கூற இந்த வீடியோ முடிகிறது. இது தற்ப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.