1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 20 ஜனவரி 2018 (20:04 IST)

திருடன் - போலீஸ்... சிம்பு - விஜய் சேதுபதி... மணிரத்னத்தின் ப்ளான் என்ன?

மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிம்பு, ஜோதிகா, விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 
 
முதல் முறையாக மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகவுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத்து படத்தொகுப்பு செய்கிறார்.  
 
வரும் ஜனவரி முதல் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் இந்த படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதை பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றது. அரவிந்த்சாமி, ஃபகத் பாசில், சிம்பு மூவரும் அண்ணன் தம்பிகளாக நடிப்பதாவும், விஜய்சேதுபதி போலீஸாகவும் நடிக்கிறாராம். 
 
ஆனால், சிம்பு இதில் ரவுடியாக நடிக்கிறார் என்கிறார்கள். விஜய் சேதுபதிக்கும் இந்த மூவருக்குமான மோதலே படமாக இருக்கலாம் என செய்திகள் வெளியாகி உள்ளது.