வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 17 ஜனவரி 2018 (17:54 IST)

விஜய் சேதுபதியின் சீதக்காதி சீக்ரெட் இதோ...

ஏற்கனவே ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்தில் வயதான கேரக்டரில் நடித்திருந்த விஜய் சேதுபதி தற்போது மீண்டும் சீதக்காதி என்ற படத்தில் வயதான தோற்றத்தில் நடித்துள்ளார்.
 
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெளியாகியது. இதில், விஜய் சேதுபதி கிட்டத்தட்ட ஒரு 80 வயது முதியவர் கேரக்டரில் நடித்துள்ளார். 
 
விஜய் சேதுபதி அடையாளமே தெரியாத வகையில் வயதான தோற்றத்தில் இருந்தார். இதற்கு மேக்கப்போட 4 மணி நேரம் ஆனதாம். ஆனால், மேக்கப்பை கலைக்க 1 மணிநேரம்தான் ஆனதாம். 
 
இதற்காக ஹாலிவிட்டில் இருந்து கெவின் ஹனே, அலெக்ஸ் நேவிள் என பிரபல கலைஞர்களை வரவைத்துள்ளனராம். இவர்கள் ஆஸ்கர் விருது வாங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பார்வதி, ரம்யா நம்பீசன், காயத்ரி உள்பட பலர் நடித்து வருகின்றனர்.