திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 17 ஜனவரி 2018 (18:59 IST)

புரட்சித்தலைவரின் புனித அவதாரமா? - என்னடா விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை

நடிகர் விஜய் சேதுபதியை பாராட்டி அவரின் ரசிகர்கள் அடித்துள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர்களின் படம் வெளியாகும் போது திருவிழா போல் கொண்டாடுவதும், பால் அபிஷேகம் செய்வதும், அவர்களின் பிறந்த நாளன்று வாழ்த்தி போஸ்டர் அடிப்பதும் வழக்கமான ஒன்று.
 
இந்நிலையில், கடந்த 16ம் தேதி பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் விஜய் சேதுபதியை பாராட்டி அவரின் ரசிகர்கள் மன்றம் சார்பில், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
 
மறைந்த நடிகர் மற்றும் முதல்வர் எம்.ஜி.ஆரோடு விஜய் சேதுபதி அமர்ந்து பேசுவது போல் புகைப்படம் கிராபிக்ஸ் செய்யப்பட்டதோடு, புரட்சித்தலைவரின் புனித அவதாரமே என புகழ் பாடப்பட்டிருந்தது.
 
விஜய் சேதுபதி தனிப்பட்ட முறையில் பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். எனவே, அதை குறிப்பிடும் விதமாகவே இப்படி புகழ்ந்துள்ளனர் எனத் தெரிகிறது.
 
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.