செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 20 ஜனவரி 2018 (14:12 IST)

எங்களை கேவலமாக பார்க்கிறார்கள்; விஜய் சேதுபதி வேதனை

சினிமாவைச் சேர்ந்தவர்கள் என்றாலே பலரும் கேவலமாக பார்க்கிறாகள் என்று நடிகர் விஜய் சேதுபதி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி கணக்காளராக தனது வாழ்க்கையை தொடங்கி, கணக்காளர் பணி பிடிக்காததால் நடிப்புப் பணியை தேர்ந்தெடுத்து பல்வேறு இடர்பாடுகளுக்கும் இன்னல்களுக்கும் இடையே திரைத்துறையில் நடிகராக நுழைந்தார். பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்த விஜய் சேதுபதி, 2010ல் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின் அவர் நடிப்பில் வெளியான பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்புத் திறமையிம் மூலம், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான தர்மதுரை, காதலும் கடந்து போகும், விகரம் வேதா போன்ற திரைப்படங்கள் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.
 
இந்நிலையில் நடிகர் ஜீவா நடித்துள்ள கீ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பங்கேற்றார். அவருடன் விஷால், ஜீவா உள்ளிட்ட சக நடிகர்களும் பங்கேற்றனர். அப்போது மேடையில் பேசிய விஜய் சேதுபதி, சினிமாக்காரர்கள் என்றால் எல்லோரும் கேவலமாக பார்க்கிறார்கள். தரம் தாழ்ந்தவர்களைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள். எங்களை ஏன் அப்படி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு படம் எடுத்துப் பாருங்கள் அப்போது தெரியும். ஒரு படத்தை எடுப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்து விடுகிறது என்று மிகவும் வருத்தத்துடன் பேசியுள்ளார்.