மனதை தொட்ட புகைப்படம்... காவலரின் மனிதாபிமான செயலை பாராட்டிய சிம்பு பட தயாரிப்பளார்!
நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் 'மாநாடு' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இணைந்துள்ளார். மேலும் இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கருணாகரன் உள்ளிட்டோரும் படத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் நடிகர் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் இஸ்லாமியராக நடிக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் பலரும் வீட்டில் இருந்து பொழுதுபோக்கிற்காக தங்களுக்கு பிடித்தமான சில வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநாடு தயாரிப்பளார் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், " ஊரடங்கு உத்தரவின் போது பணியில் இருந்த காவல் அதிகாரி ஒருவர் காகத்திற்கு தண்ணீர் கொடுத்து உதவும் மனிதாபிமான செயலை புகைப்படத்துடன் பகிந்துள்ளார். காவலரின் இதயத்தை உருக்கும் இந்த புகைப்படம் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.