செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 12 மார்ச் 2020 (20:59 IST)

சிம்பு ஒருமணி நேரம் பேசினார்: ‘ஓ மை கடவுளே’ இயக்குனர் பெருமிதம்

சமீபத்தில் வெளிவந்த அசோக்செல்வனின் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று நான்காவது வாரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படத்தை பல திரையுலக பிரபலங்கள் பாராட்டிய நிலையில் தற்போது ஐதராபாத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் சிம்பு, இந்த படத்தின் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மற்றும் ஹீரோ அசோக்செல்வன் ஆகியோர்களை மொபைல்போனில் அழைத்து சுமார் ஒரு மணி நேரம் இருவரிடமும் தனித்தனியே பேசியுள்ளார்.
 
இதுகுறித்து இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து கூறியதாவது: “எஸ்டிஆர் அழைத்தார். படத்தைப் பற்றி ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினார். மனப்பூர்வமாகப் பாராட்டினார். நான் எழுதும்போது வைத்திருந்த நிறையச் சிறு சிறு விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொன்னார். அதைப் பற்றி அவர் விரிவாகப் பேசும்போது நான் ஆச்சரியமடைந்தேன். எவ்வளவு எளிமையான மனிதர். சிறந்த உரையாடல்
 
சிம்புவின் தொலைபேசி உரையாடல் குறித்து அசோக்செல்வன் கூறியதாவது: சக நடிகரை மொபைலில் அழைத்துப் பாராட்டப் பெரிய மனது வேண்டும். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் உண்மையான மனப்பூர்வமான உரையாடல். சீனியர் ஜூனியர் உரையாடல் போலத்தான் இருந்தது. நன்றி சிம்பு சார். நீங்கள் பெரிய மனம் கொண்டவர். நீங்கள் சொன்னதை என்றும் மறக்க மாட்டேன். ரசிகர்கள் உங்களை இவ்வளவு விரும்புவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஓ மை கடவுளே (சொன்ன) தருணம்" என்று தெரிவித்துள்ளார்.