வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2024 (10:27 IST)

செஸ் சாம்பியன் குகேஷை சந்தித்து பரிசளித்த சிவகார்த்திகேயன்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். இதன்மூலம் மிக இளம் வயதில் அந்த பட்டத்தை வென்றவர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூரின் டிங் லிரெனை எதிர்த்து விளையாடிய குகேஷ், அவரை வீழ்த்தி ஆனந்தக் கண்ணீரோடு வெற்றியை ருசித்தார். வெற்றிக்குப் பின்னர் பேசிய அவர் “நான் 10 வயதில் கண்ட கனவு இப்போது நனவாகி இருக்கிறது” எனக் கூறியிருந்தார். இதையடுத்து அவருக்குத் தமிழக அரசு 5 கோடி ரூபாய் பரிசளித்துள்ளது.

குகேஷுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் குகேஷை சந்தித்து அவருக்கு கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.