செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 மார்ச் 2020 (10:48 IST)

மிஷ்கின், சிம்புவுடன் கூட்டணியில் வடிவேலு!?

சிம்பு நடிப்பில் மிஷ்கின் இயக்கும் படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நீண்ட காலமாக படங்களில் நடிக்காமல் இருந்த சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்புவிடம் இயக்குனர் மிஷ்கின் கதை சொல்லியிருப்பதாகவும், அந்த கதை பிடித்து போனதால் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிய மிஷ்கின் தற்போது சிம்புவுடன் இணைய போவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் வடிவேலுவும் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக வடிவேலுவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் வடிவேலு ‘இம்சை அரசன்’ படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பில் சரிவர கலந்து கொள்ளாததால் அவர் நடிப்பதற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. அதை மீறி வடிவேலு நடிக்க சாத்தியப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.