திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (10:48 IST)

வெந்து தணிந்தது காடு ஆடியோ லான்ச்… தன் ரசிகர்களுக்கு செம்ம அப்டேட் கொடுத்த சிம்பு!

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் 100 நாட்கள் வெற்றிகரமான சென்னை கோயம்பேடு ரோஹினி திரையரங்கில் ஓடியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஏ சந்திரசேகரன், மகேந்திரா மற்றும் கருணாகரன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படம் பல ஆண்டுகளுக்கு சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தயாரிப்பாளர் முதல் விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் அளித்த படமாக அமைந்தது.

சமீபகாலமாக படங்கள் 100 நாட்கள் ஓடுவதெல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்றாக இருந்துவரும் நிலையில் ‘மாநாடு’ திரைப்படம் நேற்று தனது  நூறாவது நாளை தொட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோஹினி திரையரங்கில் ஒரு திரையில் மட்டும் இந்த படம் 100 நாட்களைக் கடந்துள்ளது. இதையடுத்து நேற்று சிம்பு ரசிகர்களுடன் ரோகினி திரையரங்கில் படம் பார்த்தார். அப்போது அவர் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.


பின்னர் பேசிய அவர் ரசிகர்களை காட்டி ‘உங்களால்தான் இந்த வெற்றிக் கிடைத்துள்ளது. உங்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என நினைத்திருந்தேன். விரைவில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ விழாவில் ரசிகரகளை அழைத்து நடத்த உள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.