திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 ஜனவரி 2025 (12:12 IST)

ஷாருக்கான் வாங்கிய நிலத்தில் வந்த வில்லங்கம்! 9 கோடி ரூபாயை திரும்ப தரும் மகாராஷ்டிரா அரசு!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பையில் வாங்கிய இடத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக ஷாருக்கானுக்கு ரூ.9 கோடி வழங்க உள்ளது மகாராஷ்டிர அரசு

 

இந்தியில் பிரபலமான நடிகராக இருக்கும் ஷாருக்கான் மும்பை பாந்த்ரா கடற்கரை அருகே மன்னத் என்ற பெயரில் பங்களா ஒன்றை கடந்த சில ஆண்டுகள் முன்பு வாங்கியிருந்தார். அந்த நிலத்தை அதற்கு முன் வைத்திருந்த நபர் மகாராஷ்டிர அரசிடம் குத்தகைக்கு அந்த நிலத்தை பெற்றிருந்தார். அதனால் ஷாருக்கானும் 2,446 மீட்டர் சதுர பரப்பளவு கொண்ட அந்த இடத்திற்காக மாநில அரசுக்கு குத்தகை பணம் கட்டி வந்தார்.

 

சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு குத்தகைக்கு விட்டுள்ள நிலங்களை குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தி குத்தகைதாரர்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியும் என அறிவித்தது. அதை பயன்படுத்தி ஷாருக்கான் ரூ.27.50 கோடி ரூபாய் செலுத்தி அந்த நிலத்தை வாங்கியிருந்தார். ஆனால் அதன்பின்னர்தான் நில அளவையில் குளறுபடி ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

 

இதனால் ஷாருக்கான் தான் வாங்கிய நிலத்திற்கும் அதிகமாக ரூ.9 கோடி செலுத்தியிருப்பது தெரிய வந்த நிலையில், ஷாருக்கான் ஆட்சியர் அலுவலகத்தில் அது தொடர்பாக மனு அளித்தார். அதன்படி நடந்த விசாரணையில் நில அளவையில் தவறு நடந்தது உறுதியான நிலையில் ஷாருக்கானுக்கு ரூ.9 கோடியை திருப்பி அளிக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

 

Edit by Prasanth.K