விஜய்யின் ‘தளபதி 69’ படத்தின் டைட்டில் அறிவிப்பு.. மாஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
தளபதி விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில், அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. முன்னதாக இந்த படத்திற்கு விஜய்யின் முதல் படத்தின் டைட்டில் "நாளைய தீர்ப்பு" என்ற பெயர் வைக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது "ஜனநாயகன்" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
விஜய் அரசியல் கட்சியை தொடங்கி, முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். இதனால், இந்த டைட்டில் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கட்சி தொண்டர்கள் மத்தியில் விஜய் அட்டகாசமாக செல்பி எடுப்பது போன்ற காட்சி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் உள்ள நிலையில், இந்த போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் ஜோடியாக பூஜா நடிக்கும் இந்த படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.