திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By C.M.
Last Updated : சனி, 23 டிசம்பர் 2017 (15:20 IST)

சொன்னதைவிட ஒரு மாசத்துக்கு முன்பே இசையமைத்துக் கொடுத்த சிம்பு!

தான் சொன்ன தேதியைவிட ஒரு மாசத்துக்கு முன்பே இசையமைத்துக் கொடுத்துவிட்டாராம் சிம்பு.
 
விடிவி கணேஷ் தயாரிப்பில், சந்தானம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. ‘லொள்ளு சபா’ சேதுராமன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் வைபவி ஷாண்டில்யா ஹீரோயினாகவும், விவேக் காமெடியனாகவும் நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்துக்கு, முதன்முதலாக இசையமைத்துள்ளார் சிம்பு. பொதுவாக, ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாலே ரொம்ப லேட்டாக்குவார் என்பது சிம்பு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆனால், தான் சொன்னதைவிட ஒரு மாதம் முன்பாகவே இசையமைத்துக் கொடுத்துவிட்டாராம் சிம்பு. இதை, தயாரிப்பாளர் விடிவி கணேஷ் தெரிவித்துள்ளார்.