வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2017 (12:06 IST)

பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை - சிம்பு திமிர் பேச்சு

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகாருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.


 
அன்பாவனவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் சிம்பு மீது புகார் அளித்துள்ளார். அதில், சிம்பு சரியாக படப்பிடிப்பிற்கு வரவில்லை எனவும், அப்படத்தின் தோல்வியால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் எனவும் கூறியுள்ளார். மேலும், சிம்புவிடமிருந்து நஷ்ட ஈடு பெற்றுத்தரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சிம்பு “நான் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்து, ஏதேனும் பிரச்சனை வந்தால் அதற்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். ஆனால், படம் முடிந்து வெளியான பின்பு நான் ஏன் பதிலளிக்க வேண்டும்?. அதற்கு அவசியம் இல்லை. அப்படி எந்த சட்டமும் இல்லை.
 
தயாரிப்பார் சங்கத்திடமிருந்து விளக்கம் கேட்டு எந்த கடிதமும் இதுவரை எனக்கு வரவில்லை. சொல்லப்போனால், அந்தப்படத்திற்காக ரூ.3.5 கோடி எனக்கு சம்பள பாக்கி உள்ளது. அதை நான் விட்டுக்கொடுத்ததால்தான் அப்படம் வெளியானது. எனக்கு ரெட் கார்டு கொடுத்தால் அதை எப்படி சமாளிப்பது என எனக்கு தெரியும்” எனக் கூறியுள்ளார்.