சிம்பு இன்றைக்கு என்ன சொல்லப் போகிறார்?
மைக்கேல் ராயப்பன் புகாருக்கு சிம்பு இன்று என்ன சொல்லப் போகிறார் என்பதுதான் எல்லோரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்தார் சிம்பு. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படம், பயங்கர தோல்வி அடைந்தது. ‘இந்தப் படத்துக்கு சிம்பு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் தனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்’ மைக்கேல் ராயப்பன்.
இந்நிலையில், சந்தானம் நடித்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. தனுஷ் கலந்துகொண்டு இசையை வெளியிட இருக்கிறார். இந்த விழாவில், மைக்கேல் ராயப்பன் சிம்பு மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு சிம்பு பதிலளிப்பார் என சந்தானம் கூறியுள்ளார். இதனால், சிம்பு என்ன சொல்லப் போகிறார் என்பது எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.