திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 30 நவம்பர் 2017 (16:04 IST)

பணத்துக்காக சிம்பு எதையும் செய்வார்: தயாரிப்பாளர் சர்ச்சை புகார்!!

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு பணத்திற்காக எதையும் செய்வார் என பரபரப்பு பேட்டி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதே சமயம் அவர் மீது புகாரும் அளித்துள்ளார். 
 
AAA படத்தில் சரியான ஒத்துழைப்பு தராத காரணத்தினால் சிம்புவால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என மைக்கேல் ராயப்பன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். 
 
இதனால், சிம்புவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தீர்ந்த பிறகே சிம்பு தொடர்ந்து படங்களில் நடிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இது குறித்து மைக்கேல் ராயப்பன் பின்வருமாறு பேசியுள்ளார். 
 
மிருதன் படம் முடிந்த பிறகு சிம்பு என்னை தொடர்புக்கொண்டு உங்களுக்கு நான் கால்ஷீட் தருகிறேன் என்று கூறினார். ரொம்ப பொறுமையாகவும் நல்ல விதமாகவும் பேசினார். சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வருவேன். நான் எல்லாவற்றையும் உணர்ந்து விட்டேன். 
 
என் கையில் 5000 ரூபாய் கூட இல்லை. என்னை சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். பணத்தின் மதிப்பு இப்போது தான் தெரிகிறது. நான் இதை என் படம் போல நினைத்து முடித்து தருகிறேன் என்று கூறினார். ஆனால் அவர் சொன்ன மாதிரி நடந்து கொள்ளவில்லை. 
 
ஜனவரி மாதம் கால்ஷீட் தருகிறேன் என்று கூறி என்னை அலைக்கழித்தார். அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு கடனாளியாகிவிட்டேன். சிம்புவுக்கு யாரை பற்றியும் கவலையில்லை. அவரிடம் பணம் இல்லாத போது பணத்தை வாங்க அவர் என்ன வேண்டுமானாலும் பொய் சொல்வார் என்று தெரிவித்துள்ளார்.