சிம்புவின் தூங்கும் வீடியோவை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்; என்ன சொன்னார் தெரியுமா?

Last Updated: செவ்வாய், 5 டிசம்பர் 2017 (13:01 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் இறுதி மூன்று போட்டியாளர்களில் ஒருவராக வந்தார். பிக்பாஸ்  நிகழ்ச்சிக்கு பிறகு சிம்பு இசையில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபோது ஹரிஷ்  கல்யாண் சிம்பு போன்று நடித்து அசத்தினார். பின்னர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிபோது சிம்பு சந்தித்து வவரிடமிருந்து  புத்தகம் ஒன்றை பரிசாக பெற்றார்.
இந்நிலையில் தற்போது ஹரிஷ் கல்யாண், சிம்பு ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் தூங்கியபோது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஹரிஷ் கல்யாண். சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்திற்கு சிம்புதான்  இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் ஒரு பாடல் பாடியுள்ளார். 
 
இந்நிலையில் ஹரிஷ் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டுடியோவின் கதவை ஹரிஷ் திறக்க அங்கு  சிம்பு தூங்கிக் கொண்டிருக்கிறார். இரண்டு, மூன்று நாட்களாக தொடர்ந்து வேலை செய்வதால் நம் அண்ணன் ஒரு சின்ன  ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார் என ஹரிஷ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
 
AAA படத்திற்கு சிம்பு தனது வீட்டு பாத்ரூமில் டப்பிங் பேசி அதை செல்போனில் பதிவு செய்து அனுப்பியதாக செய்திகள் வெளியானது. அதே நேரத்தில் அவர் கடுமையான உழைப்பாளியாகவும் என்கிறார் ஹரிஷ் கல்யாண்.
 


இதில் மேலும் படிக்கவும் :