வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 15 ஜூலை 2021 (10:41 IST)

அஜித் புகைப்படத்தைப் பகிர்ந்து சர்ச்சையில் சிக்கிய சாந்தனு!

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் புகைப்படம் இணையத்தில் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த சூழலில் சமீபத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. மோஷன் போஸ்டர் சில எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. அதற்காக இப்போது அஜித்தின் புதிய புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புகைப்படத்தில்  ரேசர் தோற்றத்தில் அஜித் இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்த சாந்தனு ‘இதில் தல செம்ம ஸ்மார்ட்டாக இருக்கிறார்’ எனக் கூற, தீவிர விஜய் ரசிகரான சாந்தனு அஜித்தை கேலி செய்வதாக பலரும் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் சாந்தனு ‘சமூகவலைதளத்தில் எதைப் பேசினாலும் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. மிகவும் ஆபத்தான இடமாக மாறி வருகிறது’ எனக் கூறியுள்ளார்.