1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் பிரிக்கப்படும்… அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் இரண்டாகப் பிரிக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகளின் எண்ணிக்கை 5000 க்கு மேல் உள்ளது. இந்நிலையில் இவற்றை எல்லாம் உடனடியாக இரண்டாக பிரித்து பகுதி நேரக் கடைகளாக அறிவிக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.